Ponniyin Selvan

Ponniyin Selvan Movie : மணிரத்தினம் படத்தில் இருந்து தற்போது சிம்புவும் விலகி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற கதையை இயக்க தயாராகி வருகிறார்.

திருநங்கையாக தாதா 87 நாயகி பட்ட கஷ்டம் – புகைப்படங்களை பாருங்க.!

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க சீயான் விக்ரம், தளபதி விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் பேச்சுக்கு வார்த்தை நடந்து வந்தது. இவர்களும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பத்திலேயே விஜய் இந்த படத்தை நடிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனையால் விலகி கொண்டார்.

தளபதி விஜயின் வீடியோவை வெளியிட்ட தளபதி 63 நிறுவனம்.!

தற்போது இவரை தொடர்ந்து சிம்புவும் இப்படத்தில் இருந்து விலகி கொண்டதாகவும் இவர்களுக்கு பதிலாக நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.