‘பொன்னியின் செல்வன்’ படத்தின் “முதல் பாடல்” குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணி இணைந்து உருவாக்கிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது குறித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video