‘பொன்னியின் செல்வன்’ பட குழுவினர் அருள்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் என்பதை குறித்து வரலாற்றை விளக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவை எதிர்பார்க்கும் அளவிற்கு மாபெரும் பொருட்செலவில் தயாராகி இருக்கும் கல்கி புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தான் “பொன்னியின் செல்வன்- 1”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி போன்று பலர் நடித்துள்ளனர்.

அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் - வரலாற்றை விளக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வீடியோ.

பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து, மேலும் இப்படத்தின் டீசரை ஐந்து மொழிகளிலும் படக்குழு வெளியிட்டது.

அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் - வரலாற்றை விளக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வீடியோ.

அதையாடுத்து இப்படம் குறித்த பல தகவல்களை அவ்வப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அருண்மொழி வருமன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் என்பதை சில வரலாற்று ஆசிரியர்கள் விளக்கும் வீடியோ இருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raja Raja Cholan | Ponniyin Selvan BTS | Mani Ratnam | Lyca Productions | Madras Talkies | #PS1