Ponniyin Selvan Latest Update
Ponniyin Selvan Latest Update

இந்தியன் 2 பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்போது நடை பெறவில்லை என்றாலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

Ponniyin Selvan Latest Update : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கும் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில் சினிமா துறையும் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தல மனசு தனி மனசு.. வலிமை படக்குழுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் – குவிந்து வரும் பாராட்டு!

இருப்பினும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கலாம் என தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்த இரண்டு படங்களில் வேலைகளும் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் அவர்களின் VFX நிறுவனத்தில் நடந்து வருவதாக அந்நிறுவனத்தின் சூப்பர்வைசர் கூறியுள்ளார்.

மேலும் விரைவில் இப்படத்தின் பணிகள் நிறைவு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன்-2 திரைப்படத்தை ஷங்கர் இயக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க எல்லாத்தையும் பண்ணிட்டோம்.. விபத்துக்கு நீங்களும் தான் பொறுப்பு – கமலுக்கு லைகா நிறுவனம் வெளியிட்ட பதிலடி அறிக்கை.!

இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.