Ponniyin Selvan Latest Shooting Update

மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan Latest Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணி ரத்தினம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நவரசா என்ற வெப் சீரிஸ் தொடர் ஒன்று உருவாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக தொடங்கியிருந்தன. தற்போது ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளன.

இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெகுவிரைவில் தொடங்கியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கொண்டாடியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.