நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் சாதனையை பொன்னியன் செல்வன் முறியடித்துள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பீஸ்ட் திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!!… இணையத்தில் பரவும் லேட்டஸ்ட் தகவல்!.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தற்போது பலத்தை எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்பதிவு புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் சாதனையும் இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.