ponniyin selvan
ponniyin selvan

ponniyin selvan : தமிழ் சினிமா பொறுத்தவரைக்கும் இயக்குநர்களோட காலமுங்குறது ரொம்பவே குறைவாதான் பார்க்கப்படும்.

மகத்தான பல படங்கள கொடுத்த இயக்குநர்கள் கூட ஒரு கட்டத்தில அவுட் டேட் ஆகி படம் எடுக்கிறத கைவிட்டுடுவாங்க.

ஆனா 80-கள்ல அறிமுகமான காலத்தில இருந்து இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவோட முன்னணி இயக்குநராவே வலம் வர்றாரு மணிரத்னம்.

DD-யா இது? உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருக்காரு பாருங்க.!

செக்கச்சிவந்த வானம் கொடுத்த உற்சாகத்தில இப்ப அடுத்ததா தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க மணிரத்னம் தயாராகிட்டு வர்றாரு.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில நடிக்கவிருக்காங்க.

இதில் என்ன இன்னொரு ஸ்பெஷல் என்றால் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதுதான்.

வழக்கமாக தன் படங்களை தானே தயாரித்து பின்னர் அப்படத்தை வேறொரு நிறுவனத்திற்கு விற்பதுதான் மணிரத்னத்தின் ஸ்டைல்.

ஆனால் இந்தமுறை பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்கும் முழு பொறுப்பையும் லைக்காவிடமே மணிரத்னம் கொடுத்துவிட்டாராம்.

இது மணிரத்னத்தை பொறுத்தவரை ரிஸ்க் என்றே சொல்கிறார்கள்.

ஏனெனில் பிற நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் படம் எடுத்தபோது அவர் தயாரிப்பாளருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டார்.

நாயகன் படத்தில் கூட இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகே தன்னுடைய படங்களை தானே தயாரிக்கும் திட்டத்தை மணிரத்னம் கையில் எடுத்தார்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு அந்த முடிவை அவர் மீறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.