பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம் IMAX திரையரங்குகளிலும் வெளியாக இருப்பதை படகுழு போஸ்டருடன் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

IMAX திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் 2!!… ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்த படக்குழு.!

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டிருந்த படக்குழு தற்போது புதிய தகவலை பகிர்ந்துள்ளது.

IMAX திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் 2!!… ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்த படக்குழு.!

அதில், இப்படம் IMAX திரையரங்குகளில் வெளியாவது குறித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும், IMAXஇன் பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒருமுறை பொன்னியன் செல்வன் உலகில் மூழ்குங்கள், வரும் ஏப்ரல் 28 முதல் உலகெங்கிலும் உள்ள IMAX திரையரங்குகளில் இந்த காவிய அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.