Ponnambalam Request to ThalaThalapathy
Ponnambalam Request to ThalaThalapathy

ஒரு நாயா கூட என்னை மதிக்கவில்லை என பேசி அஜித்திடம் உதவி கேட்டுள்ளார் பொன்னம்பலம்.

Ponnambalam Request to ThalaThalapathy : தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டினார்.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பொன்னம்பலம் தற்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

உடல்நல குறைவால் 20 முறைக்கு மேல் தற்கொலைக்கு முயன்றேன் – நடிகர் பொன்னம்பலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அந்தப் பேட்டியில் என்ன ஒரு நாயா கூட யாரும் மதிக்கல, முதலில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த சரத்குமார் தான் ஐம்பதாயிரம் கொடுத்து உதவினார். அதன் பின்னர் ரஜினி, கமல் உதவியதாக கூறியுள்ளார்.

மேலும் ஸ்டண்ட் யூனியனில் தனக்கு வரவேண்டிய பணம் வந்தாலே போதும். அஜித், விஜய், ராகவா லாரன்ஸ், சத்யராஜ் ஆகியோர்கள் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அஜித்தையே அவர் அதிகமாக நம்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.