Pongal wishes for EPS
Pongal wishes for EPS

Pongal wishes for EPS – சென்னை: தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, ‘உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில்,

எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும்போது, பொங்கலோ பொங்கல்!

என்று மங்கல ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்’ இவ்வாறு வாழ்த்து மடலில் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவசாயத்திற்கு, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல்,

அம்மா பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்காக தமிழகம் செயல்படுத்தி வருகிறது.

“இப்பொங்கல் திருநாளில், தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்

மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.