Pon Radhakrishnan Speech
Pon Radhakrishnan Speech

Pon Radhakrishnan Speech – சென்னை:அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் கூட்டணி சேரும் வாய்ப்பு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

வரவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகள் கூட்டணி அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல் பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த 2 கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று திமுக தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும்’ வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அதிமுக – பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது.

மேலும் தேமுதிகவை திமுகவுடன் சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளிவரும். இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.