எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது பொன்மாணிக்கவேல் திரைப்படம்.
Pon Manickavel Movie Review : தமிழ் சினிமாவில் நடிக்க இயக்குனர் நடன மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் பொன் மாணிக்கவேல். இந்தப் படத்தை ஏசி முகில் என்பவர் இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் கதைக்களம் :
படத்தின் தொடக்கத்தில் ஒரு நீதிபதியின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை எப்படி நடந்தது யார் காரணம் என்பதை விசாரிக்க போலீஸ் முடிவு செய்ய ஆனால் அவர்களது தரப்பில் திறமையான போலீஸ் அதிகாரி என எவரும் இல்லை.
இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)
இதனால் ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக பணியாற்றி பிறகு ஜெயிலுக்கு சென்று வந்து விட்டு மிகப் பெரிய பங்களா ஒன்றில் மாடு மேய்க்கும் வேலை பார்த்து வரும் பொன் மாணிக்கவேல் ( பிரபுதேவா ) தான் சரியான ஆள் என அவரை மீண்டும் துணை ஆணையராக நியமித்து இந்த கேஸை கொடுக்கின்றனர்.
ஆனால் அவரோ மெத்தனமாக வேலை செய்ய குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்காமல் அங்கும் இங்கும் நடந்து நேரத்தைக் கழிக்கிறார். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள் விழ கடைசியில் இந்த வழக்கு எப்படித்தான் போய் முடிகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
பிரபுதேவா ஒரு அளவுக்கு நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால் மற்ற கதாபாத்திரங்கள் பேச்சு உதட்டசைவு பல இடங்களில் பொருந்தவில்லை. பெயருக்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு
இந்த படத்தில் நாயகியான நிவேதா பெத்துராஜ்க்கு எந்த வித வேலையும் இல்லை. ஏற்கனவே விறுவிறுப்பு இல்லாமல் செய்யும் படத்திற்கு இடையில் வந்து டூயட் பாடிவிட்டு செல்கிறார்.
இசையை பொறுத்தவரை உதிரா உத்திரா என்ற பாடல் மட்டும் ரசிக்கும் வகையில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. படத்தில் விறுவிறுப்பையாவது கொஞ்சம் கூட்டியிருக்கலாம்.