banner
சென்னை பள்ளிக்கரனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது பேனர் விழுந்து அவர் தண்ணீர் லாதி மோதி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Political party banner fell down in girl died – தற்போது சாலைகளின் நடுவில் அரசியல்வாதிகளை வரவேற்க பேனர்களை வைக்கப்படுகிறது. இதனால் பல நேரங்களில் விபத்துகள் நேரிடுகிறது. ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வைக்கப்படும் பேனர்கள் என்பதால் அரசியல் குறுக்கீடுகள் காரணமாக காவல் அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை. அதிலும் ,தற்போது முகூர்த்த நேரம் என்பதால் திருமணத்திற்கு வரும் அரசியல்வாதிகளை வரவேற்று ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

banner2

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாலையின் நடுவில் இதுபோல் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (23) தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் மீது அந்த பேனர் விழுந்ததது. எனவே, அவர் தடுமாறி கீழே விழுந்தர். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவரின் உடல் மீது ஏறியது. எனவே, உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால்தான் கதறி அழுதாரா? – 10 வருடங்களுக்கு பின் தந்தையை சந்தித்த லாஸ்லியா

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. சாலைகளின் நடுவில் பேனர்களை வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.