Pollachi Issue

Pollachi Issue : இதுவரைக்கும் நீங்க செதுக்கி கிழிச்சது போதும் என மிகுந்த கொந்தளிப்புடன் தளபதி 63 பிரபலமான விவேக் ட்வீட் செய்துள்ளார்.

பொள்ளாச்சியில் ஒரு பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரின் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களால் சுமார் 200-க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த சம்பவங்கள் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தளபதி 63 பாடலாசிரியர் விவேக்கும் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் பெண் மீது தான் தவறு என கமெண்ட் செய்துள்ளார். இதனால் கோபமான விவேக்

உன்ன மாதிரி இருக்குறவங்க தான் இதுக்கு காரணமே.. உங்க பார்வை எல்லாம் பெண் மேல மட்டும் தான் இருக்கு. அவ வாழ்க்கைய நீங்க ‘காப்பாத்தி’ ‘மீட்டெடுத்து’ ‘செதுக்கி’ கிழிச்ச வரைக்கும் போதும்

அங்க நீ கவனிக்க விட்டுட்ட ஆண்கள் என்ன மிருகங்களா மாறி இருக்காங்கன்னு கண் வாடகைக்கு வாங்கியாவது பாரு என பதிவிட்டுள்ளார்.

விவேக்கின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.