தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான விஜய் சமீபத்தில் நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள் சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது விஜய் பற்றி பேசியுள்ளார்.

அதாவது சாதாரண சாமானிய குடும்பத்தை சேர்ந்த முதல்வர் எடப்பாடி முதல்வரானதை பார்த்து ரஜினி, கமலுக்கும் அந்த ஆசை வந்து விட்டதை அடுத்து விஜய்க்கும் வந்துள்ளது.

எடப்பாடி ஒன்றும் சாதாரணமாக முதல்வராகவில்லை. பல ஆண்டுகளாக மக்களுக்காக சேவை செய்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் விஜயை யாரும் அரசியலுக்கு வாங்க வாங்க என அழைக்கவில்லை ஆனால் அவர் வருவேன் வருவேன் என குதிக்கிறார். வரட்டும் வந்தால் அடிப்படாமல் பார்த்து கொள்ளட்டும் என கூறினார்.

மேலும் நடிக்க 1 மணி நேரம் ஓய்வுக்கு கேரவனில் 3 மணி நேரம் இருக்கும் உங்களால் மக்களுக்கு எப்படி சேவையாற்ற முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

திருவிழாவில் பஞ்சு மிட்டாய் விற்பவர், பலூன் விற்பவர், ராட்டினம் சுற்றுபவர் என பலர் இருப்பார்கள் அவர்கள் பின்னாடியும் மக்கள் செல்வார்கள் அதனால் அவர்கள் எல்லாம் சாமி ஆகிட முடியாது. ஒரே சாமி தான் அது அம்மா ஜெயலலிதா தான் என்றும் கூறிய அவர் சினிமாவை நீங்க பார்த்துக்கோங்க அரசியலை நாங்க பார்த்து கொள்வோம் எனவும் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here