Police Security
Police Security

Police Security – சென்னை: வரும் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கபட உள்ளனர்.

வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் இந்தியாவில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியரசுத் தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.,

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளருக்கும் குடியரசு தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி உத்தரவுப்படி போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 32 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

எனவே,குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 12 காவல் மாவட்டத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்புகள் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்”.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்படும்.