திடீர் பரபரப்பாக நடிகர் விஜய் வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Police Safety Infront of Vijay Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திடீர் பரபரப்பு.. நடிகர் விஜய் வீட்டு முன்பு குவிக்கப்பட்ட போலீஸ் - என்ன தான் நடக்கிறது அங்கே?

தளபதி விஜய் வாங்கிய ரோல்ஸ் காருக்காக நுழைவு வரி செலுத்தாமல் இருந்தால் அவரது வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார். நடிகர்கள் நிஜ ஹீரோக்களாக இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டினார். தளபதி விஜய் நீதிபதி தன் மீது தனிப்பட்ட விமர்சனத்தை வைத்தது தன்னை காயப்படுத்தியதாகவும் கூறினார். இது குறித்து இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 60க்கும் அதிகமான உறுப்பினர்களை அழைத்து பாராட்ட உள்ளார். இதனால் பனையூரில் உள்ள வீட்டின் முன்பு விஜய் ரசிகர்கள் பலரும் குவியத் தொடங்கியது போலீசார் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.