police
சைக்கிளில் செல்லும் சிறுவனை வழிமறித்து காவல் அதிகாரி மிக வேகமாக வாகனம் ஓட்டியதற்கான அபாரதத்தை விதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Police penalties for boy who come by cycle video – தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது.. குடித்து விட்டு வாகன் ஓட்டுவது.. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாடெங்கும் இதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடே அது போலீஸ்டா பயமே இல்லையா? – இணையத்தில் பரவும் வீடியோ

இந்நிலையில், சைக்கிளில் சென்ற ஒரு சிறுவனை ஒரு காவல் அதிகாரி வழிமறித்து அபராதம் விதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் அடப்பாவிங்களா.. இதுதான் உங்க சட்டமா?.. இப்படி சைக்கிளில் வந்த சிறுவனிடத்திலெல்லாம் அபராதம் விதிப்பீர்களா? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், யார் அந்த அதிகாரி. தெரிந்தால் உயர் அதிகாரியிடம் புகார் அளியுங்கள் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.