trichy
திருச்சியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலில் சிலர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

Police found Gansters who robbery in jewellery shop – திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை 1 மணியளவில், சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுவிட்டனர். முகத்தில் குழந்தைகள் அணியும் முகமுடி அணிந்து அவர்கள் நகைகளை திருடி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

பிகில் இன்டெர்வல் சீன் எப்படி இருக்கும் தெரியுமா? – படக்குழு வெளியிட்ட அதிரடி ட்வீட்.!

இந்த திருட்டு சம்பவம் திருச்சி போலீசாருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.

theft

இந்த கொள்ளையை தொடர்ந்து, தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் கொள்ளையடித்த நகைகள் கொண்ட ஒரு பையுடன் வந்த இருவரில் மணிகண்டன் என்பவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் 8 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு மாதமாக நோட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கொள்ளையர்களை போலீசார் நெருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

theif