நடிகை மீரா மிதுன் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Police Cases on Meera Mitun : தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தமிழ் சூப்பர் மாடலிங் என சொல்லிக்கொள்ளும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய ஒருவராக வலம் வந்தார்.

அதன்பின்னர் சமூகவலைதளங்களில் ஆபாசமாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த மீரா மிதுன் மற்ற நடிகைகள் தன் முகத்தை காப்பியடித்து வருவதாக குற்றம்சாட்டினார். அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பல முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்து வந்தார்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு : மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை-அறிவுறுத்தல்

சமீபத்தில்கூட பாடகி தீ தம்முடைய முகத்தை காப்பி அடிப்பதாக கூறி குற்றம் சாட்டிய இவர் பட்டியல் இன மக்களை பற்றி தரக்குறைவாக பேசினார். பட்டியலினத்தவர் திரையுலகில் இருந்தால் அவர்களை அடித்து விரட்ட வேண்டும் என கூறினார். இவருடைய இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Sanchita Shetty Fun Chat With Konjam Pesu Team

இதனால் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொஞ்ச நஞ்சமா பேசினீங்க உங்களுக்கு இது தேவைதான் என ரசிகர்கள் மீராமிதுனை விமர்சனம் செய்து வருகின்றனர்.