Police Case Filed on DMK Member

தமிழக அரசின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் உட்பட 150 திமுக கட்சி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Police Case Filed on 150 DMK Members : இந்தியாவில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய இரு தினங்களில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-இல் முதலில் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு அதன் பின்னர் கொரானா வைரஸை கருத்தில் கொண்டு கிராமசபை கூட்டங்களுக்கு தடை விதித்தது.

இருப்பினும் திமுக உறுப்பினர்கள் தலைவராக இருக்கும் பஞ்சாயத்துகளில் தமிழக அரசின் உத்தரவை மீறி கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. மக்களுக்கு நன்மை பயக்கும் வேளாண் மசோதா குறித்து மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி பொய் பிரச்சாரம் செய்து வேளாண் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கிராமசபை கூட்டங்களால் கொரானா பரவுமா?? அதிமுக திமுகவை கண்டு அஞ்சுகிறது என விமர்சனம் செய்திருந்தார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியது சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. உங்களது பேச்சும் உங்களது கட்சி நடவடிக்கைகளையும் பார்த்து ஊரே சிரிக்கிறது இதில் உங்களைப் பார்த்து அதிமுக அஞ்சுகிறதா என கிண்டலடித்து வருகின்றனர்‌.

தமிழக அரசின் உத்தரவை மீறி கிராம சட்டசபை கூட்டத்தை நடத்திய ஸ்டாலின் உட்பட 150 திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.