Vijay & Prabhu Deva, Pokiri Combo

Pokiri Combo : விஜய் – பிரபுதேவா கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்த படம் போக்கிரி. நடிகராக இருந்த பிரபுதேவா, தமிழில் இயக்குனராக அறிமுகமான படம் இது தான்.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இதை இந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரீமேக் செய்தார் பிரபுதேவா.

துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு முதலில் வைக்க இருந்த தலைப்பு இது தானாம் – இயக்குனர் வெளியிட்ட உண்மை.!

அங்கும் மிகப்பெரிய வெற்றியை தழுவிய இப்படம், இறக்கத்தில் இருந்த சல்மான்கானின் கேரியரை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. சல்மான் கான் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த டபங் படத்தின் மூன்றாவது பாகமாக இப்படம் உருவாகவுள்ளது.

மேலும் இதன் படப்பிடிப்பு இன்று இந்தூரில் துவங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழில் பல படங்களில் பிஸி நடிகராக உலா வந்த பிரபுதேவா தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.