Poison First Aid
Poison First Aid

Poison First Aid : * வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது.

* குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு.

* வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

* பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும். சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.

* வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.

* வசம்பு தூளை தேங்காய் எண்ணையில் சிவக்க கொதிக்க வைத்து வடிகட்டி சிரங்கு மீது தடவி வர குணமாகும்.

* மஞ்சள், வசம்பு, கற்பூரம், மருதோன்றி இலை இவைகளை அரைத்து கட்டி வர கால் ஆணையின் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* வல்லாரை, வசம்பு பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here