Poi Sonna Uthamargal

☆ பொய் பேசாதவர்களே உத்தமர்கள் என்பர். ஆனால் ராமாயணத்தில் இரு உத்தமர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உத்தமர் 1 —- அனுமன்
உத்தமர் 2—– சீதை

☆ அனுமன் சீதாதேவியை தேடி இலங்கை நகருக்குள் நுழைந்ததும், அங்கிருந்த காவல் தெய்வமான லங்கினியிடம் பொய் கூறினார். அனுமனிடம் யார் நீ எனக் கேட்டார் அரக்கி. அதற்கு அனுமன்,
நான் ராமதூதன், சீதையைப் பார்க்க வந்துள்ளேன் என்று உண்மையை கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லாமல் இந்த இலங்கையின் செல்வ வளம் பற்றி கேள்விப்பட்டு இங்கு பார்க்க வந்தேன் என்று பொய் உரைத்தார். ஏன் பொய்யுரைத்தார் என்று தெரியுமா? உத்தமி சீதையை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை.

☆ இதேபோல அரக்கிகள் இந்த அசோகவனத்தில் புதிதாக வந்த குரங்கு அட்டகாசம் செய்கிறது, இது பற்றி உனக்கு தெரியுமா? என்றனர். ஆனால் சீதையோ! எனக்கு என்ன தெரியும், இப்படி எல்லாம் அட்டகாசம் செய்வதால் உங்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன் என பொய் சொல்லிவிட்டார். உத்தமரான அனுமனை காப்பாற்ற சொன்ன பொய்.

☆ உண்மையை படைத்த கடவுள் பொய்யை ஏன் படைத்தார் என இப்போது புரிகிறதா? நல்லவர்களுக்கு சோதனை வரும்போது அவர்களை காப்பாற்ற பொய் சொல்வதில் தவறில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here