Podhu Nalan Karuthi Review

Podhu Nalan Karuthi : கந்து வட்டி கொடுமைகளையும் இது தொடர்பான உண்மை சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பொது நலன் கருதி.

இரும்புத்திரை வெற்றிக்கு பிறகு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் வெளியிட்டுள்ள இந்த படத்தை சீயோன் இயக்கியுள்ளார். கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம் நடிக்க அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா ஆகிய மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படத்தின் கதை :

5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்து வட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் பேசுவது தான் இப்படத்தின் கதை.

கருணாகரன், அருண் ஆதித் ஆகியோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களாக நடித்துள்ளனர். சந்தோஷ் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவராக நடித்துள்ளார்.

கருணாகரனின் அண்ணன் ஒரு கால் டாக்சி டிரைவராக பணி புரிந்து வருகிறார். திடீரென அவர் காணாமல் போய் விடுகிறார்.

அருண் ஆதித் தன்னுடைய காதலியின் ஆசைக்காக கந்து வட்டி கடன் வாங்கி ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுக்கிறார். இதனால் இவர் படம் பாடு என்னென்ன? கருணாகரனின் அண்ணன் காணாமல் போனதற்கு காரணம் என்ன?

கருணாகரன் அண்ணனுக்கும் கந்து வட்டி டீமுக்கும் என்ன சம்மந்தம்? மக்களிடம் அநியாய வட்டி வாங்கி பொழப்பை நடத்தும் கந்து வட்டி காரனின் இறுதி நிலை என்ன என்பது தான் இப்படத்தின் கதை.

நடிகர் நடிகைகள் :

கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகியாக நடித்துள்ள அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா ஆகியோர் நாயகிகளாக தங்களது நடிப்பை படத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

மற்ற நடிகர் நடிகைகளும் தங்களுடைய கதாபாத்திரங்களை முழுமையாக நடித்து கொடுத்து இப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பம்

இசை :

ஏ. ஹரி கணேஷ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் காட்சிகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய பணியை செவ்வனே செய்துள்ளார்.

ஒளிப்பதிவு :

ஸ்வாமி நாதன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எடிட்டர் :

கிரைசன் என்பவர் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தேவையில்லாத காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

இயக்குனர் :

இயக்குனர் சீயோன் சமூகத்தில் கந்து வட்டி தொழிலால் ஏற்படும் பாதிப்புகளையும் இதனால் நடுத்தர மக்கள் படும் துயரங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்திருப்பது பாராட்ட வேண்டிய விசியம்.

விநியோகிஸ்தர் பி.டி. செல்வகுமார் :

தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி செல்வகுமார் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் உருவான இந்த படத்தை வெளியிட்ட அவருக்கு மிக பெரிய பாராட்டுகள்.

தம்பஸ் அப் :

1. படத்தில் இடம் பெற்றுள்ள உண்மை சம்பவங்கள்
2. சமூக கருத்து
3. பலரும் பேச தயங்கும் கந்து வட்டி கொடுமை பற்றி பேசியது.

தம்ப்ஸ் டவுன் :

1. ஒரு சில காட்சிகளை மட்டும் எடிட்டிங்கில் கட் செய்திருக்கலாம்.

REVIEW OVERVIEW
பொது நலன் கருதி - விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
podhu-nalan-karuthi-reviewமொத்தத்தில் : கந்து வட்டி தொழிலால் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்பட்டமாக பேசும் படம் தான் பொது நலன் கருதி