PMK Party : திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாமக ஆலோசித்து வரும் நிலையில் பிரபல நடிகையான கஸ்தூரி பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து ஆலோசிக்க தொடங்கியுள்ளன.
பாஜகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதுமட்டுமில்லாமல் பாமகவும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பாமகவின் இந்த நிலைப்பாடு குறித்து ட்விட்டரில் பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
அதாவது PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி ????♀️புரட்சி பண்ணிரலாம்.
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி ????♀️புரட்சி பண்ணிரலாம்.
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? ????
— Kasturi Shankar (@KasthuriShankar) February 17, 2019
மேலும் அதிகமுவுடன் கூட்டணி உறுதியாகி விட்டது, அதற்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.