PMK join AIADMK
PMK join AIADMK

PMK join AIADMK – சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சியின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில், பாமக – அதிமுக கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் மற்றும் விமர்சனங்கள் வெளியான நிலையில், பாமக தரப்பில் அதனை மறுத்தே வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி செயலாளர் அன்புமணி ஆகியோர் முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 2011-ல் அதிமுக ஆட்சியமைத்தது முதலே, அதிமுக கட்சியையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தது பாமக.

இந்நிலையில் பாமக மற்றும் அதிமுக 2கட்சிகளும், தற்போது கூட்டணி அமைக்க பேசிவருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.