PM Narendra Modi and Donald Trump followers
PM Narendra Modi and Donald Trump followers

டெல்லி: இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரதமர் மோடி.

இன்ஸ்டாகிராமில் உலக தலைவர்களில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டவர் என்ற பெருமையை கொண்டவர்கள் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ஒபாமா. இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார். இன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினர். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி 50.7 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். இதனிடையே சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சீன அதிபருடன் மோடி நட்பு பாராடியவிதமும் அவரை வரவேற்று உபசரித்த விதமும், உலகளவில் திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக அளவில் அதிக பின் தொடர்பவர்கள் ( followers) கொண்ட அரசியல் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார்.

இதனை பிரதமர் மோடியின் புகழ் மற்றும் இளைஞர்களுடனான அவரது தொடர்புக்கு மற்றொரு சாட்சி என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.