PM Kishan Scheme
PM Kishan Scheme

PM Kishan Scheme For Formers :  விவசாயிகள் ஏர் கலப்பையை வழிபடும் தினமான பலராமர் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இணையவழி கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

நம் நாட்டில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் எந்த சிக்கலும் எழுவதில்லை. ஆனால் அறுவடைக்குப் பிறகு அவற்றை பாதுகாப்பதில் பிரச்சினை வருகின்றனர்.

நிஜ விவசாயியாகவே மாறிய சல்மான் கான்.. உலக மகா நடிப்புடா!

இந்த நன்னாளில் வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ரூ. 1 லட்சம் கோடி கடனுதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.

நிகழாண்டில் ரூ. 10,000 கோடியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா ரூ. 30,000 கோடியும் கடனுதவி வழங்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், விவசாய குழுக்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த கடன் உதவி வழங்கப்படும். இதற்காக 12 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் வேளாண்துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் நவீன வசதிகளுடன் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.