Pitta Kathalu Teaser

பிட்ட காதலு வெப்சீரிஸ் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pitta Kathalu Teaser : தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் தற்போது OTT வழியாக வெளியாவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாவ கதைகள் என்ற திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பிட்ட காதலு என்ற படம் நெட்பிளிக்ஸ் வெளியாக பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாக உள்ளது.

4 இயக்குனர்கள் இணைந்து 4 நாயகிகளை வைத்து வித்தியாசமான முறையில் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் அமலாபால், ஸ்ருதிஹாசன், லட்சுமி மஞ்சு, ஈஷா ரெப்பா, ஜெகபதி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெட்ரூம் சீன் அமலாபால் மற்றும் முத்தக் காட்சியில் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து இருப்பதை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

YouTube video