Thai Amavasai

☆ அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும் குறிப்பாக இவ்வாண்டு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக வாய்க்கும் பல புண்ணிய பலன்களை அளிக்கும் ஸ்ரீ மஹோதய புண்யகாலம் சேர்ந்து வந்துள்ளது. இதற்கு மகோதய அமாவாசை என்பது பெயராகும். இந்நாளில் முன்னோர்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.

☆ பித்ருக்கள் வழிபாடு என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் வழிபாடு ஆகும். அதை தவறியவருக்கு சந்ததி விருத்தி ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.

☆ மகாபாரதத்தில் அம்பு படுக்கையில் வீற்றிருந்த பீஷ்மர், இந்த தை மாத உத்திராயண காலத்திலேயே தனது உயிரை நீத்து மோட்சம் அடைந்தார்.

☆ தர்ப்பணம்:
தர்ப்பை புல்லை வைத்து அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பர்.

☆ பாவங்கள் அகல:
பித்ரு லோகத்தில் இருந்து வந்த நமது முன்னோர்களை அம்மாவாசையில் முறைப்படி வழியனுப்பும் விதமாக, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய தவறினால் பாவங்கள் விளையும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே பாவங்கள் அகல அனைவரும் தை அமாவாசையில் பித்ரு கடன் செலுத்தி முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்.

☆ தை அமாவாசை:
தை அமாவாசை தினத்தன்று அதிகாலை எழுந்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். பொதுவாக இத்தினத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தீர்த்தங்கள், புனித நதிகள் ஆகியவற்றில் நீராடி பின்பு மறைந்த உங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த சடங்குகளை செய்வது சிறப்பு.

☆ தர்ப்பணம், திதி போன்றவற்றை அளித்த பின்பு சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு அரிசி, புத்தாடை, தட்சிணை போன்றவற்றை தானம் செய்வதால் உங்களை அண்டியிருக்கும் பித்ரு சாபங்கள், தோஷங்கள் ஆகியவை நீங்கும். மேலும் காய்கறிகளை பயன்படுத்தி செய்யபட்ட சாதத்தை முன்னோர்களை வணங்கி, காகங்களுக்கு வைத்த பின்பே நீங்கள் சாப்பிட வேண்டும்.

☆ மேலும் இத்தினத்தில் உங்கள் சக்திக்கு முடிந்த அளவிற்கு ஏழைகள், முதியோர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்வதால் மறைந்த பித்ருக்களின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய தோஷங்களும் நீங்கி நன்மையான பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here