Pithru Dhosam

☆ நம் முன்னோர்களின் சாபம் அல்லது அவர்களின் அதிருப்தியே பித்ரு தோஷத்திற்கு காரணமாக அமைகிறது.

பொதுவாக அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

☆ இவ்வாறு நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால் நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி, பலவகையான பிரச்சனைகள் தோன்றி வேதனைப்படுத்தும்.

☆ எனவே அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். முன்னோர் வழிபாடு முறைப்படி செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது.

☆ பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்:

1. அட்சய திருதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.

2. காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலும் கூட பித்ரு தோஷம் நீங்கும்.

3. அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் அம்மாவாசை வருமானால், அன்றைய தினம் சிரார்த்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

4. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் பித்ருதோஷம் நீங்கும்.

5. தாய் அல்லது தந்தை இறந்த திதி சரியாக குறித்து வைக்காதவர்கள், மஹாளய அமாவாசை தினத்தில் அல்லது ஆடி மாதம் வரும் அமாவாசை தினத்தில் கூட திதி தரலாம்.

6. தந்தையை இழந்தவர்கள் காக்கைக்கு தினமும் உப்பு இல்லாமல் சைவ உணவை அல்லது தயிர் அன்னத்தை கருப்பு எள் கலந்து வைத்தாலும் கூட பித்ரு தோஷம் தீரும்.

மேற்கண்ட பரிகாரங்களை முறையாகச் செய்தால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடும் பாக்கியம் கிடைக்கப்பெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here