இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள பிஸ்தா படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஒன் மேன் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் பிஸ்தா. சிருஷ்டி ஜோடியாக மிருதுளா நடிக்க அருந்ததி, சதீஷ், செந்தில், யோகி பாபு என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

படத்தின் நாயகனான சிரிஷ் தன்னுடைய கல்யாணத்திற்கு பத்திரிக்கை பேனர் மண்டபம் என அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுகிறார். ஆனால் மணப்பெண் இன்னும் தேடிப் பிடிக்கவில்லை. மேலும் இவருக்கு திருமணம் ஆகக்கூடாது என வில்லன் குரூப் தீவிரமாக வேலை செய்ய நண்பர்கள் ஒரு பக்கம் பெண் தேடுகின்றனர்.

கல்யாண பெண் இல்லாமல் கல்யாண ஏற்பாடுகள் நடந்தது ஏன்? செய்த ஏற்பாடுகளுக்கு ஏற்ப கடைசியில் இரவுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்கலாம்.

படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் சிரிஷ் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதல் எமோஷன் காட்சிகளில் இன்னும் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.

சதீஷ், யோகி பாபு, செந்தில் என பல காமெடி நடிகர் படத்தில் இடம் பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இவர்களது காமெடி ஒர்க் அவுட் ஆனாலும் சில இடங்களில் சலிப்பை கொடுக்கிறது.

தரண் குமாரின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளன. படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்குனர் ரமேஷ் பாரதி படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி காமெடி கலந்த கதையாக படத்தை கொண்டு சென்றுள்ளார்.

REVIEW OVERVIEW
பிஸ்தா விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
pistha-movie-reviewமொத்தத்தில் பிஸ்தா படம் ரசிகர்களுக்கு நல்ல காமெடி விருந்து