Pink Vs Nerkonda Paarvai : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar RajaPink Vs Nerkonda Paarvai : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

பிங்க் படத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தை ஒப்பிடும் போது எது பெஸ்ட் அண்ட் பெட்டர் என பிங்க் படத்தில் நடித்த நடிகரே கூறியுள்ளார்.

Pink Vs Nerkonda Paarvai :

தமிழ் சினிமாவில் தல அஜித் தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி திரையுலகில் படிப்படியாக முன்னேறியவர். இவருடைய தன்னம்பிக்கைக்காகவே பலர் அஜித் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

இவருடைய நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சீ நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

பிங்க் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் தமிழ் நடிகரான டெல்லி கணேஷ். இவர் நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிங்க் படத்தில் நடித்தது எனக்கு பெரிய அளவில் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் நேர்கொண்ட பார்வை படம் பிங்க்ககை விட 1000 மடங்கு பெட்டர்.

இந்த படத்தில் வாய்ப்பு வந்த போது கூட என் மகன் நீங்க அஜித் பக்கத்தில் நின்றாலே போதும் என கூறினான் என கூறியுள்ளார் டெல்லி கணேஷ்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.