மீன ராசி

Benefits of Pine 2019 : சிறந்த ஞானம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் துவக்கம் சிறப்பாகவே இருக்கும். பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

* சொந்தத் தொழில் தொடங்க அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது.

* வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

* பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்தது போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும்.

சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

* விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.

*அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.

* குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

* பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும்.

* பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல் சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும்.

அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும்  உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

மீனத்திற்கு திருப்பு முனையான வருடம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here