Piles Issue :
Piles Issue :

Piles Issue :

பைல்ஸ் (மூலம்) நோயினால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ 10 தீர்வுகள்:

☆ அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர்.

☆ இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல.

அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும்.

☆ இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான்.

1. மூலநோய் குறைய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி, ஆசனவாயில் வைத்து கட்டி வந்தால் வெளி மூலநோய் குறையும்.

2. சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் உடல் குளுர்ச்சியாகி மூலம் விடுபடும்.

3. பப்பாளிப் பழம், மாம்பழம், இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.

4. கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்

5. புளியாரை கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் மூலவாயு பித்தம்,மயக்கம்,சுவையின்மை போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.

6. அருகம்புல் 20 கிராம் அரைத்து பால் கலந்து பருகி வர குணமாகும்.

7. மாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து வெயிலில் காயவைத்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.

8. குப்பைமேனி இலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து பசும்பாலில் கலந்து ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.

9. புங்கன் இலைகளை அரைத்துக் கட்டினால் இரத்த மூலம் குறையும்.

10. அகத்திக்கீரை, கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து ஆசனக் குளியல் செய்தால் இரத்த மூலம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here