பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் அங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Pichaikkaran 2 First Look Trolls : தமிழ் சினிமாவில் நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இயக்குனர் சசி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக விஜய் ஆண்டனி பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தை சசிக்கு பதிலாக பெண் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படியே காப்பி அடித்தது போல இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வாய்விட்டு வம்பில் சிக்கிய வனிதா.. உடனே கைது பண்ணுங்க போலீசில் பரபரப்பு புகார் – விஷயம் இதுதான்!

2 போஸ்டருக்கும் ஒரே வித்தியாசம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நம்மை பார்த்த படி உள்ளார், பிச்சைக்காரன் 2 போஸ்டரில் விஜய் ஆண்டனி பின் பக்கம் தெரிவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் அன்றே கணித்த சூர்யா என கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/Dineshwaran_11/status/1286957858915942402?s=19