Pia Bajbai Complaint on Covid19 Test

மே ஏழாம் தேதி கொரொனா டெஸ்ட் கொடுத்ததாகவும் தற்போது வரை ரிசல்ட் வரவில்லை எனவும் பியா பாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

Pia Bajbai Complaint on Covid19 Test : தமிழ் சினிமாவில் கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் சாதாரண மக்களை மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி பாதிக்கச் செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகையான பியா பாஜ்பாய் கடந்த 7ஆம் தேதி தினமும் தன் குடும்பத்தாரும் கொரானா பரிசோதனை செய்ததாகவும் ஆனால் தற்போது வரை எங்களுக்கு ரிசல்ட் வரவில்லை. ஆய்வகத்தில் கேட்டும் ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை என ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நல்லவேளை என்னுடைய குடும்பத்தாருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.