Petta Vs Viswasam USA Collection

Petta Vs Viswasam USA Collection :

பேட்ட மற்றும் விஸ்வாஸம் படங்களின் முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வசூல் என்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த பேட்ட மற்றும் தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் ஆகிய படங்கள் நேற்று அதாவது ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது.

சொல் பேச்சை கேட்காத சன் பிக்சர்ஸ், பேட்டைக்கு வந்த புது சிக்கல்.!

இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வசூலும் நல்ல படியாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலும் வெளியான இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் அமெரிக்காவில் மொத்தம் 194 இடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையிடப்பட்டது.

இரண்டு மொழியையும் சேர்த்து 133k டாலர் வசூல் செய்துள்ளது. மேலும் விஸ்வாசம் படம் தமிழில் மட்டும் 71 இடங்களில் திரையிடப்பட்டது.

காளியின் ஆட்டம் ஜெயித்ததா? – பேட்ட விமர்சனம்.!

இதன் மூலம் அமெரிக்காவில் விஸ்வாசம் 18k டாலர் வசூல் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.