Petta Vs Viswasam

Petta Vs Viswasam Release : பேட்ட ரிலீசால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது, ஆனால் அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் மோதி கொள்ள உள்ளன.

இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் மோதிக் கொள்வதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஸ்வாசம் பட ரிலீஸை தள்ளி வைத்து கொள்ள முடியுமா? என சாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் இதனை விஸ்வாசம் டீம் முடியாது என மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகும், பேட்டையுடன் மோதும் எனவும் கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

இதனால் இந்த இரண்டு படங்களும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள போவது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.