Petta Mems

Petta Mems : ரஜினி விஸ்வாசத்தை தான் எச்சரித்து பேசினார் என்பது போல் சமூக வளையதளங்களில் மீம்ஸ் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் 2019-ம் வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளன.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கார்த்தி சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த ட்ரைலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவனாச்சும் பொண்டாட்டி புள்ளைங்க குட்டிங்க என செண்டிமெண்ட் கிண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடி போய்டு, கொல காண்டுல இருக்கேன். மவனே கொல்லாம விட மாட்டேன் என ஒரு வசனத்தை பேசி இருப்பார்.

இதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர் ஒருவர் விஸ்வாசம் படம் அப்பா, மகள், குடும்பம் என செண்டிமெண்ட் வீசியத்தில் உருவாகி இருப்பதால் இதனை குறிப்பிட்டு சொன்னபடி மீம்ஸ் உருவாக்கியுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பொதுவாகவே ரஜினி, அஜித்தின் தீவிர ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளார்கள். ஒரு சில விஷ கிருமிகள் தான் இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Petta Mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.