Viswasam Collection

Viswasam Collection : பேட்டையை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் திரைப்படம் மிக பெரிய சாதனை படைத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் என இரண்டு பெரும் படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்தன.

திடீரென ஸ்லிம்மாக மாறிய அஜித், ஆனால்? – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

தற்போது வரை இந்த இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகின்றன. விஸ்வாசம் திரைப்படத்திற்கான 50வது நாள் கொண்டாட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்படம் வசூலில் பேட்டையை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2.O திரைப்படம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும் தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படம் முதலிடத்தில் இருந்தாலும் அது அனைத்து மொழிகளின் வசூலை சேர்த்து தான் முதலிடத்தில் உள்ளது.

ஆனால் விஸ்வாசம் திரைப்படம் தமிழில் மட்டும் தான் வெளியாகி இருந்தது என்பதால் அதன் மூலம் மட்டுமே இப்படியான வசூல் என்பதால் ரசிகர்களின் மத்தியில் கொண்டாட்டம் உச்சத்தை தொட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.