Petta vs Viswasam Box Office Collections
Petta vs Viswasam Box Office Collections

Petta vs Viswasam Box Office Collections – இரண்டு வார முடிவில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் மலேசிய வசூல் நிலவரம் என்ன என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படமும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன.

அந்த வகையில் மலேசியாவில் இப்படங்களின் தற்போதைய வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இரண்டு வார முடிவில் பேட்ட திரைப்படம் ரூ. 12.93 கோடி வசூலுடன் முதலிடத்தையும் விஸ்வாசம் திரைப்படம் ரூ 9.66 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பேட்டையை விட விஸ்வாசம் திரைப்படம் அதிகமான வசூலுடன் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.