Petta Vs Viswasam

Petta Vs Viswasam Bo : இரண்டு வார முடிவில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகியவை ஒரே நாளில் அதாவது ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மட்டும் பேட்ட திரைப்படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது.

இதனால் சென்னை வசூலிலும் பேட்ட திரைப்படம் முதலிடத்தை பிடித்து வந்தது. விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் இரண்டு வார முடிவிலும் இதே நிலை தான் தொடர்கிறது. இதுவரை பேட்ட திரைப்படம் ரூ 12.73 கோடி வசூலுடன் முதலிடத்தையும் விஸ்வாசம் திரைப்படம் ரூ 10.22 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.