Petta-vs-Viswasam

Petta Vs Viswasam : பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களுமே 30 நாளிலும் பாக்ஸ் ஆஃபீஸை திணற வைத்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் என இரண்டு மிக பெரிய நடிகர்களின் படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் ரிலீசாக ஒரே நாளில் மோதி கொண்டன.

விஸ்வாசத்தால் அனைவருக்கும் செம லாபம் – அதிகாரபூர்வமாக வந்த அறிவிப்பு.!

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது 30 நாட்கள் ஆகியும் பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடி கொண்டிருக்கிறது.

யங் ரஜினியை பார்க்கவே பேட்ட திரைப்படத்திற்கு கூட்டம் அலை மோதுகிறது. அதே போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் அமைந்ததால் இப்படத்தை குடும்பத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதனால் இன்று வரை நல்ல வசூலையை ஈட்டி வருகின்றன. 29 நாளில் சென்னை மட்டும் இந்த படங்கள் எவ்வளவு வசூல் எட்டியுள்ளன என்ற விவரங்களும் வெளியாகியுள்ளன.

அவை இதோ

பேட்ட – ரூ 15.22 கோடி
விஸ்வாசம் – 12. 74 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.