Sarkar Vs Petta Vs Mersal

Petta Vs Mersal Vs Sarkar :

பேட்ட, மெர்சல், சர்கார் இந்த மூன்று படங்களில் எந்த படத்தின் பாடல்கள் பெஸ்ட் என பாடலாசிரியர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீவீட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருவார் விவேக். இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் ஆகிய படங்களில் பாடல் எழுதி இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

இவைகளில் எந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அந்த டீவீட்டில், இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே மெர்சல் படத்தின் பாடல் தான் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

விவேக்கின் இந்த பதிவு தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.