
Petta & Viswasam Release Date : விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியானாலும் தனித்தனியாக தான் வெளியாக உள்ளது.
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவித்து விட்டனர்.
இதனால் பொங்கல் ரேஸில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும்.
இந்த படங்கள் மட்டுமில்லாமல் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன், ஜி.வி பிரகாஷின் வாட்ச் மேன், ஆர்.ஜே பாலாஜியின் LKG ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளன.
விஸ்வாசம் படமும் பேட்ட படமும் ஒரே நாளில் மோதி கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவை வெவ்வேறு நாட்களில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தை ஜனவரி 10-ம் தேதி வெளியிடவும் விஸ்வாசம் படத்தை பொங்கல் அன்று அதாவது ஜனவரி 15-ம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.