பொங்கலுக்கு வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம், தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய படங்களில் தமிழக ஷேர்களை அறிவித்துள்ளார் பிரபல விநியோகிஸ்தர்.
தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்கள் என்றாலே முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசாகும். அப்படி தான் பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி நல்லவொரு வெற்றியை சுவைத்தது.
இதனையடுத்து தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி திரைப்படம் வெளியாகி அவையும் நல்ல வெற்றியை பெற்றன. ஆனால் ஷேர் ரீதியாக லாபம் கொடுத்த படங்கள் எது? என்பது அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி.
பேட்ட மற்றும் விஸ்வாசம் தமிழகத்தில் மொத்தமாக ரூ 115 கோடி ஷேர் கொடுத்துள்ளது.
மேலும் பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் தமிழகத்தில் ரூ 98 கோடி ஷேர் கொடுத்துள்ளதாக விநியோகிஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.
பிகில் தான் 2019-ன் வசூல் வேட்டையில் முதலிடம் என தயாரிப்பாளர் கூறிய நிலையில் ஷேரை வைத்து பார்க்கும் போது பேட்ட, விஸ்வாசம் முதலிடம் பிடித்திருப்பதாக விநியோகிஸ்தர் கூறி இருப்பது ஷாக்கிங் தான்.