Petta Ullaallaa Song
Petta Ullaallaa Song

Petta Ullaallaa Song :பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் உல்லல்லா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அனிருத் முதல் முறையாக ரஜினிக்கு இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் கடந்த டிசம்பர் 4-ம் தேதி வெளியாகி இருந்தது. இதனையடுத்து இன்று இரண்டாவது சிங்கிள் டிராக்காக உல்லல்லா பாடல் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

அதன்படி தற்போது செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் முதல் சிங்கிள் டிராக்கை போலவே இதனையும் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.