Petta Trailer Review

Petta Trailer Review : பேட்ட ட்ரைலர் பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் அவர்களது கருத்துகளை கூறி வருகின்றனர். அவைகளில் சிலவற்றை இப்பொது பார்க்கலாம்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க பிளாஷ் பேக் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக மிரட்டியுள்ளார். மேலும் பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் ரஜினி பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதே போல பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் அடித்து தூள் கிளப்பி விட்டது.

இதனைத்தொடர்ந்து பேட்ட படத்தின் ட்ரைலர் படு மாஸாக இன்று வெளியாகியது. இந்த ட்ரைலரை பற்றி திரையுலக பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்க.